சென்னையில் பெண் குரலில் பேசி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஆண்களை நூதன முறையில் மோசடி செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு பாலியல் டார்ச்சர் கொடுப்பதாக கூறி, சென்னை மயிலாப்பூர் காவல் நிலையம் மற்றும் சைபர் கிரைம் பிரிவில் 170 க்கும் மேற்பட்ட , ஒரே மாதிரியான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
பெரும்பாலும் அனைத்து புகார்களும் ஆன்லைன் மூலமாகவே கொடுக்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக புகார் தாரரர்களை அணுகும் போது, தான் இந்த புகாரை கொடுக்கவில்லை எனவும் தனக்கும் இந்த புகாருக்கும் சம்பந்தமில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய சைபர் கிரைம் போலீசார், பெண் குரலில் பேசி மோசடி செய்து வந்தது, வலன் ராஜ்குமார் ரீகன் என்ற நபர்தான் என்பதை கண்டறிந்தனர். இதை அடுத்து ரீகனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பல பெண்களின் ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஆண்களுக்கு அனுப்பி, அவர்களை வலையில் வீழ்த்தியுள்ளார். ஆண்களை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு, பெண் குரலில் பேசி, அவர்களுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி, தாம் உல்லாசமாக இருக்க வரவேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளார்..
இப்படி பல ஆண்களிடம் பணமோசடி செய்துள்ளார்.. பணத்தை தராத ஆண்கள் மீது ஆன்லைன் மூலம் போலிசில் புகார் அளித்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.. ஆபாச உரையாடல்கள், போட்டோக்கள் ,வீடியோக்களை போலீசுக்கு ஆன்லைனில் அனுப்பி , அந்த காப்பியை தன்னிடம் ஏமார்ந்தவர்களுக்கு அனுப்பி பணம் பறித்துவந்துள்ளார்.
தமிழகத்தில் மட்டும் அல்லாமல் நாடுமுழுவதும் பல ஆண்களை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. மேலும் துபாய், மலேசியா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள ஆண்களை ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.இதை அடுத்து, ரீகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
Discussion about this post