கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரத்தினபுரி பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவரின் கணவர் உடல் நிலை பாதிக்கப்பட்டுளதாக கூறப்படுகிறது. இவர் தனது மகளுடன் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு சொந்தமான நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த சாக்ரடீஸ், பூபதி, கண்ணன் ஆகியோர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகேஸ்வரி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.