விழுப்புரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 66 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் அடுத்த பானாம்பட்டில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விழுப்புரத்திலிருந்து பண்ருட்டி நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள இன்றி 66 லட்சம் பணம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்.
Discussion about this post