லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 595 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 619 கோடி ரூபாய் அவரது தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு நடுகளில் மார்டின் வருமனத்திற்கு அதிமாக முதலீடு செய்துள்ளதாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வந்த தகவல்கள் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற சோதனை முடிவுக்கு வந்த நிலையில், லாட்டரி அதிபர் மார்டின் அலுவலகங்கள் மற்றும் வீட்டில் கணக்கில் வராத 595 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய அவணங்கள் இல்லாமல் 619 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை அவரது நிறுவனங்களில் செய்துள்ளதும் தெரியவந்தது. மார்டின் வீட்டில் இருந்து 8 கோடியே 25 ஆயிரம் ரூபாய் பணமும், 24 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Discussion about this post