நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், கம்பியில் சிக்கிய புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, உயிலட்டி கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் புலி ஒன்று சுருக்கு கம்பியில் மாட்டிக் கொண்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி புலியை விரட்ட முற்பட்டனர்.
ஆனால், புலி சுருக்கு கம்பியை இழுத்துக்கொண்டு புதருக்குள் சென்றது. இதனால் புலியை பிடிப்பதில் வனத்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது. காலை முதல் மாலை போராடிய பிறகும் புலியை பிடிக்க முடியாததால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து தப்பியோடிய புலியை நிரந்தரமாக பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
Discussion about this post