தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை கண்காணிப்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், சில மருந்து விற்பனைக் கடைகளும், காலாவதியான மருந்துகளை பொது இடங்களில் கொட்டி வருவதாக வந்த புகார்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், 10 பேர் கொண்ட குழு, அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது விதிமுறைகளை மீறி மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.
Discussion about this post