தமிழகத்தில் வெய்யில் வாட்டியெடுத்த நிலையில் செங்கல்பட்டில் திடீரென கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. கடந்த 2 நாட்களாக நிலவிய பனிப்பொழிவால் கடுமையாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.
காலையில் பனிப்பொழிவும், பகலில் கடும் வெயில் என மக்களை வாட்டியெடுக்கிறது. இன்று அதிகாலை திடீரென பனிமூட்டம் அதிகரித்ததால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் பனியால் மறைக்கப்பட்டிருந்தது.
சாலையோரத்தில் இருக்கும் மரங்கள், ஆற்றுப் பாலங்கள், ரயில்வே பாலம் உள்ளிட்டவை தெளிவாக கண்ணுக்குத் தெரியாததால், பேருந்து, லாரிகள், வேன்கள், இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மெதுவாகச் செல்ல நேரிட்டது. காலை 7 மணிக்குப் பின்னர், படிப்படியாக பனி மூட்டம் குறைந்தது.
Discussion about this post