தஞ்சையில் நடைபெற்ற மன்னன் ராஜராஜசோழனின் சதய விழாவில் மன்னனின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 34வது சதய விழா நேற்று தஞ்சை பெரிய கோயிலில் மங்கல இசையுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து திருமுறை வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. யானை மீது திருவாசகம் புத்தகம் வைக்கப்பட்டு, நான்கு ராஜ வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றதை தொடர்ந்து, சிவலிங்கத்திற்கு 48 திரவியப் பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
Discussion about this post