பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு, அன்றைய தினம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கும் பொது விருந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி 3ஆம் தேதி அன்று, பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருக்கோவில்களில் சிறப்பு வழிபாட்டிற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் உள்ள முக்கியத் திருக்கோவில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
கே.கே. நகர் சித்தி விநாயகர் கோவில் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் துணை முதலமைச்சரும் கலந்து கொள்கின்றனர். காளிகாம்பாள் கோயிலில் மின்துறை அமைச்சர் தங்கமணியும், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் கலந்து கொள்கின்றனர்.