உலக நன்மை வேண்டி, முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் 1008 சங்குகளின் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக்கோயிலில் மாசி மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு 1008 சங்குகள் வைத்து சங்காபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு உச்சிகால அபிஷேகங்கள் நடைபெற்றன. தண்டாயுதபாணி சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டன.
Discussion about this post