மஹா சிவராத்திரி: வடமாநிலங்களில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை

மஹா சிவராத்திரியையொட்டி வடமாநிலங்களில் உள்ள சிவன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள சிவன் கோயிலில் காலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

இதேபோல், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ஷிவாலா பாக் பையான் கோயிலில் சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள சிவன் கோயில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள திரியாம்ப்கேஸ்வர் கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியையொட்டி, கர்நாடகா மாநிலம் கலாபுராகியில் பிரம்ம குமாரிகள் சங்கத்தினர், 300 கிலோ கொண்டை கடலைகளால் 25 அடி உயரத்தில் சிவலிங்கம் அமைத்து வழிபாடு  மேற்கொண்டனர்.

Exit mobile version