திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பில் புதிய அணை கட்ட 387 கோடியே 60லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடுள்ளது.
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் 182 ஆண்டுகள் பழமையான முக்கொம்பு மேலணையின் மதகுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வெள்ளத்தில் அடித்துச் சென்றது. ஆகஸ்ட் 24 ஆம் தேதி அணையை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய அணை கட்டப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி 387 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அணையால், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 லட்சத்து 58ஆயிரத்து 460 ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும்.
பழைய அணையில் இருந்த 48 கதவணைகளுக்கு பதிலாக, 55 கதவணைகளுடன் அணை கட்டப்படுகிறது. கதவணைக்கு மேல் இருசக்கர வாகனங்கள் பயணிக்கும் வகையில் சாலை அமைகிறது.
Discussion about this post