எட்ஜ் பாஸ்ட் என்ற அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடங்கியது

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், எட்ஜ் பாஸ்ட் என்ற அதிநவீன சிசிடிவி கேமராவை ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.

அதிநவீன தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய எட்ஜ் பாஸ்ட் என்ற சிசிடிவி கேமராக்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் ரோகித் நாதன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கணினியில் மென்பொருள் மூலமாக இந்தியா முழுவதும் உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் போது, குற்றவாளி ரயில் நிலையத்தினுள் நுழையும்போதே அடையாளம் காணமுடியும் என்றார். தற்போது வரை 60 ஆயிரம் குற்றவாளிகளின் புகைப்படங்களை கணினியில் பதிவேற்றியுள்ளதாக தெரிவித்த அவர், ஓடும் ரயிலில்களில் சோதனைக்காக 8 ரயில்களில் இந்த எட்ஜ் பாஸ்ட் எனப்படும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version