ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி: இந்திய அணி தீவிர வலைப்பயிற்சி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்கேற்பதற்காக சிட்னி சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி 71 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்தது. இந்நிலையில் வரும் 12ஆம் தேதி இரு அணிகள் இடையேயான ஒரு நாள் போட்டி தொடங்குகிறது. இதனையொட்டி, சிட்னி சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு நாள் போட்டியில் பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, அந்நாட்டுடன் டி20 தொடரில் விளையாட உள்ளது.

Exit mobile version