மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்ற வட்டாச்சியர் சம்பூர்ணம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அவர் செல்லவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. எனினும் தடை செய்யப்பட்டுள்ள பகுதிக்குள் உரிய அனுமதியின்றி சென்றதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் அறிவித்துள்ளார். இதனால் நேற்று முதல் நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post