சாலையில் விரைந்து செல்லும் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் பயணிகள் இருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள சென்னை ஆட்டோ ஓட்டுனர் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்
சாலையில்,ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்காக காத்திருக்கும் போது சில நேரங்களில் விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் விதமாக சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சாகுல் ஹமீது, கருவி ஒன்றை பொருத்தியுள்ளார். அதாவது, சாலையில் காத்திருக்கும் பயணிகள், ஆட்டோ அல்லது டாக்ஸிகள் அவ்வழியாக வரும் போது அந்த வாகனத்தில் பயணிகள் இருக்கிறார்களா இல்லையா என்பதை இக்கருவி தெருவித்து விடும். இதனால் சாலையின் குறுக்கே சென்று வாகனத்தில் ஏற முயல்வதை தடுக்க முடியும் என்றும் இதனால் விபத்துக்களிலிருந்து தப்பிக்க முடியும் என சாகுல் ஹமீது கூறியுள்ளார். மேலும், இந்த கருவிக்கான உரிமத்தை வாங்க அரசிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post