வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் குழந்தைளை விஷம் வைத்து கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டையை அடுத்த வேகாமங்கலம் கிராமத்தை சேர்ந்த சங்கர் – நித்யா தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு அஸ்வினி என்ற மகளும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நிகழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. கேட்டரிங் வேலைக்காக சங்கர் சென்னை வந்த சமயம், தன்னுடைய இரு குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்து விட்டு நித்யாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நித்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post