இந்திய கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக யோகா திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்
ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை கடந்த 2014ம் ஆண்டு அறிவித்தது. அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அந்த தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் ராஞ்சியில் நடைபெற்று வரும் யோகா நிகழ்ச்சியில் 30 ஆயிரம் பேருடன் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சர்வதேச யோகா கொண்டாட்டத்தில் இணைந்துள்ள அனைத்து மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும், பொதுமக்கள் அனைவரும் தினசரி யோகா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.