மகாராஷ்டிராவில் இருந்து வந்து சென்னையில் கொள்ளையடித்த நபர்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கைவரிசைக் காட்டிவந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த கொள்ளையனை, தனிப்படைக் காவல்துறையினர் 10 நாட்களாக வலைவீசித் தேடி கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் இருந்து வந்த கொள்ளையன் ஒருவன், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகக் காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து அந்தக் கொள்ளையனைப் பிடிப்பதற்காக காவல் உதவி ஆணையர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படைக் காவல்துறையினர், 10 நாட்களாக பீகார், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில காவல்துறையிடம் இருந்து தகவல்களை சேகரித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்காக சென்னையில் இருந்த 60க்கும் மேற்பட்ட கண்கானிப்புக் கேமராக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்நிலையில், திருமங்கலம் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த கொள்ளையன் சிக்கினான். பின்னர் அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உல்லாசமாக வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, காவல்துறையினர் அந்த கொள்ளையனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

Exit mobile version