சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியாக, மேலும் கும்கி யானை ஈடுபடுத்தப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கண்ணாடி புத்தூர் பகுதிகளில் 10 நாட்களாக சுற்றித் திரியும் சின்னதம்பி யானை கண்ணாடிபுத்தூரில் கரும்பு காட்டில் நுழைந்து வெளியேறாமல் உள்ளது. கலீம் மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகளை கொண்டு சின்னதம்பியை அமராவதி வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டனர்.
எனினும் கும்கிகளை பார்த்து மிரட்சியடைந்த சின்னதம்பி கரும்பு காட்டிலேயே பதுங்கியது. மேலும், அதனுடன் நட்புடன் பழகியது. இந்நிலையில் சுயம்பு என்ற கும்கியை அழைத்து வந்து சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை தொடரவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post