நம்ம தமிழ்நாட்டுல குறிப்பா தென் மாவட்டத்துல கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளைக்கு காளை மாட்ட பரிசா கொடுக்கற வழக்கம் இருந்துச்சு. மனிதர்களோட ரசனை மாற ஆரம்பிச்சதும், இந்த வழக்கமெல்லாம் மறைஞ்சு போச்சு, இப்பவெல்லாம் கல்யாண பண்ணிக்கிற ஜோடிக்கு கட்டில், மெத்தை பரிசா கொடுக்கறதுதான் இப்ப நடைமுறைல இருக்கு. இருந்தாலும் பாரம்பரியமெல்லாம் மொத்தமா வழக்கொழிஞ்சு போயிடல அப்டின்னு ஆறுதல் சொல்றமாதிரி ஒரு சம்பவம் நடந்துருக்கு.
அருப்புக்கோட்டைய சேர்ந்தவரு 28 வயசான அருண். அப்பா, அம்மா கூட காமராஜர் நகர்ல இருக்காரு.அருண் பெரிய மாடுபிடி வீரர், மதுரை பாலமேடு, அலங்காநல்லூர், வாடிவாசல்னு, ஜல்லிகட்டு போட்டி நடக்குற எல்லா இடத்துக்கும் போயி காளை மாட்டை அடக்கிருக்காரு. இவருக்கு திருமணம் நடந்தப்போ அவரோட நண்பர்கள்ளாம் சேர்ந்து அதிரா-ன்ற ஜல்லிகட்டு காளைய மாட்டையும், ராஜபாளையம் நாய், சண்டை போட்ற ஆட்டு கிடாய் ஒன்னையும் கல்யாணம் மண்டபத்துக்கே கூட்டி வந்து மாப்பிள்ளை அருணுக்கு பரிசா குடுத்துருக்காங்க. இத பாத்த மாப்பிள்ளை ஆச்சரியத்துல உறைஞ்சு போயிட்டாரு. இருக்காதா பின்ன, ஜல்லிகட்டு வீரருக்கு, ஜல்லிகட்டு காளையவே பரிசா கொடுக்கறதுன்னா சாதாரணமா!
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பாத்தவங்க, ஒரு காலத்துல நடைமுறைல இருந்ததை எல்லாம், இந்த காலத்து இளைஞர்கள் ஞாபகம் வச்சு பண்றாங்க அப்டின்னு பாராட்டிட்டு போனாங்க.
Discussion about this post