கோவையில், உறவினருடன் மனைவி பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிணத்துக்கடவு பகுதியில் வசித்து வந்த சபரிராஜ், கட்டிட காண்ட்ராக்டராகவும், இவரது மனைவி பரிமளம், அரசுப்பள்ளியில் லேப் டெக்னீசியனாகவும் பணி புரிந்து வந்தனர். சபரிராஜன் சகோதரி அவருக்கு தொலைப்பேசியில் அழைத்த போது, மது போதையில் இருந்த சபரிராஜன் மனைவியிடம் தொலைப்பேசியைக் கொடுத்து பேசுமாறு கூறியதாகவும், இதனை அவரது மனைவி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சபரிராஜன் கத்தியைக் காட்டி பரிமளத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதுடன், தன்னைத்தானே கால் தொடையில் குத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சபரிராஜன், அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால், ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post