கோத்தகிரியில் நடைபெற்ற கலைவிழா பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் கோவை மண்டல கலை பண்பாட்டு மையம் இணைந்து இந்த கலை விழாவை நடத்தின. சங்கரம் நாட்டிய பள்ளியின் அரோரா குழுவினரின் அக்னிக் குஞ்சு நாட்டிய நாடகம் நடைபெற்றது.
முன்னதாக, கோத்தர் இன மக்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் பாரதியாரின் பாடல்கள் தமிழர் புகழை கலைஞர்கள் விளக்கினர்.
ஒயிலாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம், கோலாட்டம், காவடியாட்டம், கும்மி, வில்லுப்பாட்டு, சிலம்பாட்டம், மயிலாட்டம், களரி , தெருக்கூத்து உள்ளிட்டவை கலை நிகழ்ச்சியில் இடம்பெற்றன.