இரு சக்கர வாகனங்களை பாதுகாக்கக் உருவாக்கப்பட்ட ஜிபிஎஸ் கருவி

இரு சக்கர வாகனங்களை பாதுகாத்துக் கொள்ள தமிழக இளைஞரால் உருவாக்கப்பட்ட ஜிபிஎஸ் கருவி, வாடிக்கையாளர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. இதுகுறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்…

குற்றங்களையும், குற்ற செயல்களையும் கண்டுபிடிப்பதில் மனிதர்களை விட அவர்கள் உருவாக்கும் நவீன கண்டு பிடிப்புகள் திறன்பட செயல்படுகிறது. அதற்கு உதாரணமாக சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ் கருவிகள் என பலவற்றை கூறலாம்.

சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்த இரு சக்கர வாகன மெக்கானிக் ரஹ்மத்துல்லா என்பவர் அதி நவீன தொழில் நுட்ப வசதிகொண்ட ஜிபிஎஸ் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். பட்டதாரியான இவரின் கண்டுபிடிப்பு, அதிகரித்து வரும் வாகன திருட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

செயலியின் பதிவிறக்கத்திற்கு ஏற்ப பெயர் மாற்றம் செய்யப்பட்டு வரும் இந்த ஜிபிஎஸ் கருவியின் தற்போதைய பெயர் ஏபிஎம் கிங்ஸ். இந்த ஜிபிஎஸ் கருவி மூலம், வாகனம் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் இருந்து மர்ம நபரால் திருடப்பட்டால், வாகன உரிமையாளரின் செல்போனுக்கு குருஞ்செய்தி மட்டும் இன்றி அலாரம் மூலம் அபாய ஒலி அறிவுறுத்தப்படும். இது மட்டும் இன்றி வாகனம் ஸ்டார்ட் செய்யப்பட்டு பயணிக்கும் வழி உரிமையாளரின் செல்போன் செயலிக்கு மேப் மூலம் காண்பிக்கப்படும்.

இதை சுதாரித்து வாகனத்தை கண்டுபிடித்துவிடலாம். இது மட்டும் இன்றி அந்த ஜிபிஎஸ் கருவி வாகனத்தின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பொருத்தும்விதமாக உள்ளது. மறைமுகமாக பொருத்தி வைக்கப்படுவதால் மர்ம நபர்கள் அதில் தங்கள் கைவரிசையை காண்பிப்பது அவ்வளவு எழிதாக அமையாது. குறைந்த விலையில் அதீத பயன் தரும் இந்த ஜிபிஎஸ் கருவிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

 

Exit mobile version