விருதுநகரில், தகாத உறவால் தற்கொலைக்கு முயன்ற சிறுமி உயிரிழந்த அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலக்காஞ்சிரங்குளத்தைச் சேர்ந்த திருமணமான சரவணனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமிக்கும் இடையே, தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை இரு குடும்பத்தினரும், கண்டித்த நிலையில் இருவரும் விஷம் அருந்தித் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post