மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே குழந்தைகள் கடத்தும் கும்பல் என வதந்தி பரவியதால் 6 பேர் மீது கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
தார் பகுதியை சேர்ந்த விவசாயிகள் 6 பேர் கடன் பாக்கி தொகையை வசூலிப்பதற்காக கிர்கியா கிராமத்துக்கு காரில் சென்றனர். அப்போது கடன் கொடுத்தவர்கள் விவசாயிகளை தாக்கியுள்ளனர். இதனால் அச்சம் அடைந்த விவசாயிகள் காரில் தப்பினர். இதற்கிடையே காரில் வந்த விவசாயிகள் குழந்தைகளை கடத்தும் கும்பல் என வதந்தி பரவியதால், காரினை கிராம மக்கள் சுற்றிவளைத்தனர். மேலும் காரில் இருந்த 6 விவசாயிகளையும் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post