பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் எண்ணை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 3 கோடியே 39 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வருமான வரித் துறையினர் மூலம் ரயில் நிலையம், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
பணப்பட்டுவாடா குறித்து 1800 425 6669 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று சத்யபிரதா சாஜூ கூறினார். இதேபோல் 9 44 54 677 07 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாகவும் தங்களது புகாரை பொதுமக்கள் பதிவு செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்லக்கூடியவர்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருந்தால் அது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
Discussion about this post