இராமநாதபுரம் மாவட்டம் கீழமுந்தல் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீன் ஏலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழமுந்தல் மீனவ கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.ஆனால் இங்கு மீன் ஏலக்கூடம் இல்லாததால், சாலைகளில் வைத்து மீன்களை ஏலம் விடுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே மீன்களை காயவைக்க உலர்தளம், ஏலக் கூடம் அமைத்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post