கோவை அருகே தனியார் துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து சாம்பலானது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் ஜெயபால் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையை ஓட்டி அமைந்துள்ள வணிக வளாகத்தில் முதல் தளத்தில் குடோனும்ம், தரை தளத்தில் துணி வியாபாரமும் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் முதல் தளத்தில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்த போதும் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post