பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சமடைந்தனர்.
ராமேஸ்வரம் மற்றும் பாம்பனை இணைக்கும் பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட மின்கசிவால் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாலத்தின் நடைமேடையை அகற்றி தீ மேலும் பரவாமல் தடுத்ததால், பெரிய அளவிலான விபத்து தவிர்
க்கப்பட்டது.
தீ விபத்தில் சுமார் 100 மீட்டர் அளவிலான 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேபிள்கள் எரிந்து சேதமடைந்தன. மாற்றுவழியில் மின்இணைப்பு வழங்க மின் ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். சீரமைப்பு பணிகள் நிறைவடைய நான்கு நாட்களுக்கு மேலாகும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post