மாயமான விமானத்தை தேடும் பணியில் அதிநவீன போர்விமானம் பி.8.ஐ.

மாயமான ஏ.என்.32 ரக விமானத்தை தேடும் பணியில், அரக்கோணத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான அதிநவீன போர்விமானம் ஈடுபட்டுள்ளது.

அசாம் மாநிலத்தின் ஜோக்ஹாட் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் ஏ.என்.32 ரகத்தை சேர்ந்த போக்குவரத்து பயன்பாட்டிற்கான விமானம் அருணாச்சலபிரதேசத்தின் மெக்சாவில் உள்ள ராணுவ தளத்திற்கு புறப்பட்டு சென்றது. இதில் 5 பயணிகள் உள்ளிட்ட 13 பேர் பயணம் செய்தனர்.

புறப்பட்டு சென்ற 35 நிமிடத்தில் கட்டுப்பட்டு அறையின் ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்து விமானத்தின் தகவல் தொடர்பு இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த மாயமான விமானத்தை தேடும் பணியில் சுகோய் -30, சி -130 ஆகிய 2 விமானப்படை விமானங்கள் ஈடுபட்டன. ஆனால் விமானம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, மாயமான விமானத்தை தேடும் பணியில், அரக்கோணத்திலிருந்து கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து, உலகின் அதிநவீன போர் விமானமான பி.8.ஐ விமானம் ஈடுபட்டது. தொடர்ந்து 16 மணிநேரம் வடகிழக்கு மாநில பகுதியில் இந்த விமானம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

Exit mobile version