திருவண்ணாமலை அருகே ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பில் விவசாயி ஒருவர் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் நவாப்பாளையம் கிராமத்தில் அம்பிகா முருகன் எனும் விவசாயி கடந்த ஓராண்டு காலமாக நாட்டுக்கோழிகளை வளர்த்து பராமரித்து வருகிறார். இதன்மூலம் கால்நடைகளுக்கு தேவையான தீவனமான மக்காச்சோளத்தை தனது 2 ஏக்கர் சொந்த நிலத்தில் பயிரிட்டு தயார் செய்து கொள்கிறார். இதனால் கால்நடைகள் ஆரோக்கியமான ஊட்டச்சத்து பெறுவதால் தரமான நாட்டுக்கோழி உற்பத்தி செய்ய முடிகிறது என்கிறார். மேலும் சொந்தமாக தீவனம் பயிரிடுவதால் நல்ல லாபம் தற்போது கிடைப்பதாகவும் பருவ மழை பெய்யாததால் வறட்சியை சந்தித்த விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வறட்சி நிவாரணம் அளித்துள்ள தமிழக அரசிற்கு நன்றியையும் தெரிவித்தார்.
Discussion about this post