கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும், இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன், வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவலை குறைக்கும் வகையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய தளர்வில்லா முழு ஊரடங்கு, நாளை காலை 6 மணி வரை அமலில் இருக்கும். இதனால், மாநிலம் முழுவதும் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பால் விநியோகம் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த காரணங்கள் தவிர, வேறு எதற்கும் பொது மக்கள் வெளியில் வரவேண்டாம் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். அவசர மருத்துவத்தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது. இதை தவிர, அவசியமின்றி வரும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post