திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளருக்கு ஆதரவாக காவல் துறையினரை வழிமறித்து போராட்டம் நடத்திய நகை கடை உரிமையாளர்கள் 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி செல்வராஜ், திருடிய நகைகளை மதுரை நகைக்கடை பஜாரில் உள்ள கோவிந்தராசுவிடம் விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்த சென்ற குற்றப்பிரிவு அதிகாரிகளின் வாகனத்தை நகை கடை உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
Discussion about this post