இந்திய உணவத்தில் திடீரென கார் நுழைந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் கடற்கரைக்கு சென்றும், நட்சத்திர விடுதியில் உணவு சாப்பிடும் தங்களின் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பிரித்தானியாவில் உள்ள கிழக்கு சசெக்சின் லூவிசில் இந்திய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்கு ஆண்டின் கடைசி நாளான நேற்று இரவு மக்கள் அந்த உணவகத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் உணவை ஆர்டர் செய்துவிட்டு , அமர்ந்து கொண்டிருந்தபோது திடீரென அவ்வழியாக வந்த கார் உணவகத்தின் உள்ளே நுழைந்து விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் உணவகத்தில் இருந்த மூவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர் என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post