காஷ்மீரில் குண்டு வெடிப்பில் பலியான சிறுவனின் உடல் தியாகிகள் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லாரூ பகுதியைச் சேர்ந்தவன் சிறுவன் ஆரிப் அகமது. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, தரையில் வெடிக்காமல் கிடந்த குண்டு ஒன்றை ஏதோ பொருள் என்று நினைத்து கையில் எடுத்து ஆரிப் அகமது விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது. இதில் படுகாயமடைந்த சிறுவன் உள்ளூர் மருத்துவமனையிலும் அதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மஹாராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தீவிர சிகிச்சை ஆரிப் அகமதுக்கு அளிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். சிறுவனது உடல் உள்ளூரில் உள்ள தியாகிகளின் உடல் அடக்கம் செய்யப்படும் கல்லறையில் ஞாயிறு காலை அடக்கம் செய்யப்பட்டது.
Discussion about this post