கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவன் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போடிச்சிப்பள்ளி, கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராம் என்பவரின் மகன் விஸ்வநாத். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆணியை விழுங்கியுள்ளான். இதனால் அச்சம் அடைந்த பெற்றோர் சிறுவனை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
குடலில் சிக்கியுள்ள ஆணியை எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால், சிறுவன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளான்.
Discussion about this post