புவனகிரி அருகே வெய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த நான்கு வருடங்களாக தனக்கிருக்கும் கேள்வி ஞானத்தால் வள்ளலாரைப் பற்றி பாடல் பாடி, சொற்பொழிவாற்றி வருகிறார்.
கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்துள்ள வெய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், ஜெயசித்ரா தம்பதியினரின் மகளான ஹரிணி. இவர் தனக்கிருக்கும் அதீத கேள்வி ஞானத்தால் திருவருட் பிரகாச வள்ளலாரைப் பற்றி சொற்பொழிவாற்றி வருகிறார். சிறுவயதிலேயே வள்ளலாரின் கருத்துக்களாலும், அவர் எழுதிய பாடல்களாலும் ஈர்க்கப்பட்ட ஹரிணி புலால் உண்பதை மறுத்து வாழ்ந்து வருகிறார். தற்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் ஹரிணி வள்ளலாரைப் பற்றிய தனது கேள்வி ஞானத்தை மட்டும் வைத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக பாடல்பாடி, சொற்பொழிவாற்றி வருகிறார். இவரின் வள்ளலார் பற்றிய பாடல் மற்றும் சொற்பொழிவுகளைக் கேட்க கூடியவர்கள் ஹரிணியை வெகுவாக பாராட்டி தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post