ஏ முதல் இசட் வரையிலான எல்லா எழுத்துக்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஊழல் செய்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி குற்றஞ்சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா, டவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு அந்த எழுத்தில் துவங்கும் ஊழல் எதுவெனவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஏ என்றால் அதானி ஊழல், பி என்றால் பால்கோ ஊழல், சி என்றால் சிக்கி ஊழல், ஈ என்றால் நிலநடுக்க நிவாரண நிதி ஊழல், எப் என்றால் மீன்வளத்துறையில் ஊழல் என கூறியுள்ளார்.
மேலும் ஜி என்றால் ஜிஎஸ்பிசி ஊழல், எச் என்றால் ஹட்கோ ஊழல், ஐ என்றால் இண்டிகோ சுத்திகரிப்பு ஊழல், ஜெ என்றால் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா ஊழல், கே என்றால் கேரள மருத்துவத்துறை ஊழல், எல் என்றால் லலித்மோடி ஊழல், எம் என்றால் மெட்ரோ ரயில் ஊழல், என் என்றால் நிரவ் மோடி ஊழல்,
ஓ என்றால் ஆபரேஷன் வெஸ்ட்லேண்ட் ஊழல், பி என்றால் பொதுவிநியோக திட்டத்தில் ஊழல், க்யூ என்றால் கனிமசுரங்க ஊழல், ஆர் என்றால் ரபேல் போர் விமான ஊழல், எஸ் என்றால் எஸ்எஸ்சி ஊழல், டி என்றால் டெண்டர் ஊழல், யு என்றால் யுடிஐ ஊழல்,
வி என்றால் வியாபம் ஊழல், டபிள்யூ என்றால் எடை அளவு ஆய்வாளர் ஊழல், எக்ஸ் என்றால் எக்ஸ்ரே ஊழியர் தேர்வில் ஊழல், ஒய் என்றால் எடியூரப்பாவின் ஊழல், இசட் என்றால் ஜுபின் இரானி நில ஊழல் என அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது பாஜக என்ற பெயருக்கு பர்ஸ்டாச்சாரி ஜனதா பார்ட்டி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஊழல் ஜனதா கட்சி என்று இதற்கு பொருளாகும்.
Discussion about this post