அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கான இடைக்கால தேர்தலில் வெற்றி பெறப் போவது ஜனநாயகக் கட்சியா, குடியரசுக் கட்சியா என்பது சில மணி நேரங்களில் தெரிய வரும்.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான 435 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதேபோல், செனட் சபையில் உள்ள 35 பேரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.
இந்நிலையில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண ஆளுநர்களை தேர்ந்தெடுப்பதற்கான இடைக்காலத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 50 மாகாணங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த வாக்குப்பதிவில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அமெரிக்காவில் உள்ள மாகாணங்கள் வெவ்வேறு கால நேரத்தை கொண்டுள்ளதால், ஒவ்வொரு பகுதியாக வாக்குப்பதிவு நிறைவடைந்து வருகிறது. சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post