பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடு எதிரொலியாக தீபாவளியன்று சென்னையில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கும் நேரமாக தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் தீபாவளி அன்று, சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் சராசரி காற்று மாசு குறியீடு 349 என மிகவும் அபாய அளவில் இருந்ததாக கூறப்படுகிறது.
டெல்லியை ஒப்பிடும் போது, சென்னையில் மிகச்சாதாரண அளவில் காற்று மாசு, 65 ஆக பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூர் பஸ் டெப்போ பகுதியில் காற்று மாசு 139 ஆகவும் ,வேளச்சேரியில் 83 ஆகவும் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு வேளச்சேரியில் காற்று மாசு 284 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காற்று மாசு குறியீடு 87 ஆகவும், ஆக்ராவில் 353 என்ற அளவில் உள்ளது.
Discussion about this post