உச்ச நீதிமன்றம் அறிவித்த நேரங்களில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என ஆரணியில் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாசுவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தீபாவளி பண்டிகையன்று இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசும் இதை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. இந்தநிலையில், இது குறித்து ஆரணி போலீசார் பொதுமக்கள் மத்தியில் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். பேருந்து நிலையம், காந்தி மார்கெட், உள்ளிட்ட பொதுமக்கள் கூட்டம் அதிகம் உள்ள பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிப்பது குறித்தும், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்தும் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post