அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 50காசுகள் சரிந்து 72ரூபாய் 94காசுகளாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய வணிகநேர முடிவில் 72ரூபாய் 44காசுகளாக இருந்தது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் இருந்தே ரூபாய் மதிப்பு சரிந்துகொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் 50காசுகள் வீழ்ச்சியடைந்து 72ரூபாய் 94காசுகளாக இருந்தது. இறக்குமதியாளர்களும் வங்கிகளும் அமெரிக்க டாலரை அதிக அளவில் வாங்கியதே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் பகல் 11மணியளவில் 125புள்ளிகள் குறைந்து 34ஆயிரத்து 886ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 44புள்ளிகள் குறைந்து பத்தாயிரத்து 509ஆக இருந்தது.
Discussion about this post