இலங்கையில் மேலும் 4 அமைச்சர்கள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், பிரதமர் ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த 2-ம் தேதி பதவியேற்றுக் கொண்டது.
13 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில் மேலும் 4 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அமைச்சரவை அந்தஸ்துள்ள இரண்டு அமைச்சர்கள் உள்பட 4 பேர் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Discussion about this post