பெரிய பட்ஜெட், நட்சத்திர அந்தஸ்து என்று கூறி அதிக கட்டணம் வசூல் செய்தால், திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்துள்ளார்.
கோவில்பட்டியில் பொது கூட்டுறவு பண்டக சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் முன் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர்ராஜு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கமல்ஹாசன் அரசியல் அரிச்சுவடி அரியாமல் காலடி எடுத்து வைப்பதாக விமர்சித்தார். பருவகால மாற்றத்தினால் நோய்கள் வருவது சகஜம் என்று குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கலாமே தவிர, மக்களை அச்சுறுத்தி, பீதியை ஏற்படுத்த கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post