எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்கும் புதிய நடைமுறை, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் உச்சவரம்பு நாற்பதாயிரம் ரூபாயாக இருந்தது. இந்த உச்சவரம்பை இருபதாயிரம் ரூபாயாக குறைக்கப்போவதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
அதன்படி, கிளாசிக், மேஸ்ட்ரோ வகை ஏ.டி.எம் அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏ.டி.எம்.களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ வங்கி விளக்கம் அளித்துள்ளது.
எஸ்.பி.ஐ வங்கியின் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
Discussion about this post