நாம் பயன்படுத்தும் ஸமார்ட் போன்களில் எண்ணற்ற வசதிகள் வந்துகொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் அப்டேட் செய்து பல நிறுவனங்கள் தங்களின் படைப்புக்களை ஸமார்ட் போன்களில் செலுத்தி வருகின்றனர். போன்களில் கேமரா வசதி இருப்பது நமக்கு ஒரு வரமே. எந்த இடத்தின் படத்தையும் எடுத்து, நம்மால் பத்திரப்படுத்த முடியும். கேமராவில் ஜூம் என்பது, எந்த ஒரு பொருளையும் பெரிதாக்கி நம்மக்கு காட்டுகிறது. ஆனால் அதுவும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் தான். தற்போது அதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
நமது ஸமார்ட் போன்களில் iMicro எனும் புதிய சாதனத்தை கொண்டு சிறிய பொருளையும் பெரிதாக்கி காட்ட உருவாக்கப்பட்டுள்ளது.இது பொருட்களை துல்லியமாக பெரிதாக்கி காண்பிக்கக்கூடியது.அதாவது சுமார் 800 முறைகளுக்கு பொருட்களை பெரிதாக்கிக்காட்டக்கூடியது. ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இலகுவாக இணைத்து பயன்படுத்தக்கூடியதாகவும் iMicro இருக்கின்றது. ஆட்காட்டி விரலின் நுனிப்பகுதி அளவே உள்ள இச்சாதனமானது இந்திய மதிப்பு படி 2000 ரூபாய்கள் தோராயமாக இருக்கும் என்கிறார்கள் இதை உருவாக்கியவர்கள். தற்போது நிதி திரட்டும் நோக்கத்தில் Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள iMicro சாதனம் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
Discussion about this post