தீபாவளி என்றால் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். இந்த முறை பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுவதாகக் கூறி பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் காற்று மற்றும் ஒலி மாசு அளவைக் குறைக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுவினர் மூன்று வகையான பசுமை பட்டாசுகளை உருவாக்கியுள்ளனர். இந்த தயாரிப்புகளில் மாசு ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்களான சல்பர், அலுமினியம் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகள் வெடிக்கும் போது நீராவி அல்லது காற்றை வெளியிட்டு மாசைக் குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் 30 முதல் 35% வரை காற்றில் கலக்கும் நுண் துகள்கள் குறையும். ஒலி அளவு 110 டெசிபலுக்குள் இருக்கும். சோதனை முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பசுமை பட்டாசுகள் அடுத்த ஆண்டு தான் விற்பனைக்குக் கிடைக்கும். சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த தயாரிப்புகளால் 5 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு தரும் பட்டாசு தொழில்துறையின் வர்த்தகம் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
Discussion about this post