சென்னையில் காலை முதல் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று அதிகாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதனையடுத்து திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழை சென்னை வாசிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
Discussion about this post