வடக்கிழக்கு பருவ மழை எப்போது பெய்தாலும் முன்னெற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வடகிழக்கு பருவமழை எப்போது பெய்தாலும் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், விவசாயிகளுக்கு வரப் பிரசாரமாக 9 விதமான ஆவணங்களை வீட்டிலிருந்தே பெறலாம் எனக் கூறினார். நான் தான் தலைவன் என்ற தலைக்கனத்தில் உள்ள தினகரனுக்கு மக்கள் செல்வாக்கும் கிடையாது, சின்னமும் கிடையாது என்றார் அவர், எய்ம்ஸ் மருத்துமனை மத்திய அரசின் நிதியிலிருந்து வரக்கூடிய ஒன்று என்று தெரிவித்த அமைச்சர் உதயகுமார், மதுரை அருகே இந்த மருத்துவமனை அமைவது உறுதி எனக் குறிப்பிட்டார்.
Discussion about this post